18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை கூடலழகர் கோவிலுக்கு 12லட்சம் மதிப்புள்ள தங்க முலாம் யானை அர்ப்பணிப்பு…

மதுரை கூடலழகர் கோவிலுக்கு 12லட்சம் மதிப்புள்ள தங்க முலாம் யானை அர்ப்பணிப்பு…

எழுதியவர்: ஆசிரியர் April 19, 2019, 10:50 pm

மதுரை கூடலழகர் கோயிலுக்கு ரூ.12 லட்ச ௹பாய் மதிப்பிலான தங்க முலாம் பூசிய யானை வாகனம் தனியார் நிறுவனம் அர்ப்பணிப்பு

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா கமிட்டி டிரஸ்ட் சார்பில் இன்று மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கூடலழகர் பெருமாள் கோவிலுக்கு ரூ.12 லட்சம் மதிப்பில் தங்க முலாம் பூசிய யானை வாகனத்தை வழங்கினர்.

இந்த வாகனம் 45 நாட்களாக தத்ருபமாக வடிவமைத்ததாக கூறப்படுகிறது. அந்த வாகனம் இன்று (19/04/2019) மாலை 7.00 மணியளவில் அதன் ஒருங்கிணைப்பாளர் வரதன்சந்தர் மதுரை கூடழலகர் பெருமாள் கோவில் உதவி ஆணையர் அனிதாவிடம் வழங்கினார்.

கூட ழலகர் பெருமாள் உற்சவரை யானை வாகனத்தில் வைத்து கோவிலை சுற்றி பாடல் பாடி வீதி உலாவந்தனர். பின்னர் பூஜைகள் நடைபெற்றது. இந்த அமைப்பினர் ராமானுஜரின் உன்னதமான சமய சமூகப் பணிகளின் மகத்துவம் பற்றிய கருத்தரங்கும் நாளை நடைபெற இருக்கிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!