18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் உட்பட தமிழகம் முழுவதும் ஓட்டு பதிவு தொடங்கியது…

இராமநாதபுரம் உட்பட தமிழகம் முழுவதும் ஓட்டு பதிவு தொடங்கியது…

எழுதியவர்: ஆசிரியர் April 18, 2019, 11:11 am

இராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.

இராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான கொ.வீரராகவ ராவ், அவரது மனைவி ஹர் சந்திகாவுடன் வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

அதே போல்  காலை ஏழு முப்பது மணி அளவில் இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே குருவாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனி  ஓட்டுப் பதிவு செய்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!