17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணையில் நீரை தோக்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி..

வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணையில் நீரை தோக்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் April 17, 2019, 7:06 pm

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணையிலிருந்து மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழாவிற்காக கடந்த இரண்டு நாட்களாக வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு மதுரையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள ரங்கப்ப நாயக்கன்பட்டி கிராம ஊராட்சியில் இருந்து ராமராஜபுரம் ஊராட்சி வரை வைகை ஆற்றுப் படுகை செல்கிறது.                     இந்த படுகையில் குறுக்கே ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.

இது சம்பந்தமாக தமிழக அரசு கடந்த ஆண்டு 12 கோடியே 30 லட்சம் மதிப்பில் நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி அடுத்துள்ள நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், நிலக்கோட்டை பேரூராட்சி, ஆகிய அலுவலகத்தில் இருந்து குடிநீர் உறை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ள பகுதியில் ஒரு தடுப்பணை கட்டி நீரைத் தேக்க அரசு உத்தரவிட்டது.                 

இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும்,  அதே சமயம் விவசாயத்திற்கு தேவையான நீர் கிணறுகளில்  உயர்வதற்கும்      வாய்ப்பாக இருக்கும்.          அதன் மூலமாக கடந்த சில மாதங்களாக தடுப்பணை கட்டும் பணி விரைவாக நடைபெற்று  நிறைவு பெற்றது.                     தற்போது சித்திரை திருவிழாவிற்காக திறக்கப்பட்ட தண்ணீர் இந்த தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு  ஏற்படாத வகையில் இந்த தடுப்பணையில் தேங்கியுள்ள தண்ணீர் பயன்படும் என பேசிக்கொண்டனர். இதுகுறித்து இப்பகுதி  விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!