17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழக-கேரள எல்லை புளியரையில் மதுபானம்,ரேஷன் அரசி பறிமுதல்..

தமிழக-கேரள எல்லை புளியரையில் மதுபானம்,ரேஷன் அரசி பறிமுதல்..

எழுதியவர்: ஆசிரியர் April 17, 2019, 6:51 pm

நெல்லை மாவட்டம் தமிழக-கேரள எல்லையான புளியரையில் துணை ராணுவத்தினர் மேற்கொண்ட வாகன சோதனையில் மது பாட்டில்கள் மற்றும் ரேஷன் அரிசி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் தேர்தல் நடைபெறுவதையொட்டி மூன்று நாட்களுக்கு அனைத்து டாஸ்மார்க் கடைகளையும் அடைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் கேரளாவில் இருந்து மதுபானங்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் துணை ராணுவத்தினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சோதனை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நெல்லை மாவட்டம் தமிழக-கேரள எல்லையான புளியரையில் தமிழக போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் செங்கோட்டை காவல்துறை ஆய்வாளர் சுரேஷ் குமார்,உதவி ஆய்வாளர் ஷாம் சுந்தர் ஆகியோர் தலைமையில் கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வந்த அரசு பேருந்துகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் மதுபாட்டில்கள்,ரேஷன் அரிசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

செய்தியாளர், அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!