18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் மதரஸா பட்டமளிப்பு விழா…

கீழக்கரையில் மதரஸா பட்டமளிப்பு விழா…

எழுதியவர்: ஆசிரியர் April 17, 2019, 4:14 pm

கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல் நிலைப்பள்ளி சாலையில் ஆயிஷா ஹமீதா குர்ஆன் ஹிப்ழு மதரஸா இயங்கி வருகின்றது. இந்த மதரஸாவின் ஹாபிழ் பட்டமளிப்பு விழா இன்று (17/04/2019) காலை ரஹ்மத் ஆயிஷா பட்டத்து சுல்தான் அப்துல் காதர் மஹாலில் மதரஸா நிறுவனர் ஹபீபுல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.

இந்த பட்டமளிப்பு விழாவில் இராமநாதபுரம் மாவட்ட காஜியும், கீழக்கரை அருஸியா மதரஸாவின் முதல்வருமான ஸலாஹீத்தீன் மாணவருக்கு பட்டமளித்து சிறப்புரை ஆற்றினார். இந்த விழாவில் கீழக்கரை அனைத்து ஜமாஅத் பிரதிநிதிகள், உலாமா பெருமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் வரவேற்புரை ஆற்றிய மதரஸா நிறுவனர் ஹபிபுல்லா தனது உரையில் இந்த மதரஸாவில் கீழக்கரை மாணவர்களும் சேர்ந்து படித்து கீழக்கரை ஆலீம்கள் நிறைந்த ஊராக மாற வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்தார். இந்த மதரஸாவில் படிக்கும் மாணவர்கள் மார்க்க கல்வியோடு உலக கல்வியும் கற்க ஏற்பாடு செய்து இருக்கின்றோம் என்றார்.

இந்த விழாவை அறக்கட்டளை நிர்வாகிகள் அஹமது பிலால், முஹம்மது அஜீகர், பவுசூல் அமீன் சிறப்பாக செய்து இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!