18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் பார்வையற்றோர் மீது வாகனம் மோதி 4பேர் காயம்..உடனடியாக களத்தில் இறங்கிய செஞ்சிலுவை சங்கத்தினர்..

மதுரையில் பார்வையற்றோர் மீது வாகனம் மோதி 4பேர் காயம்..உடனடியாக களத்தில் இறங்கிய செஞ்சிலுவை சங்கத்தினர்..

எழுதியவர்: ஆசிரியர் April 17, 2019, 3:51 pm

மதுரை திருப்பரங்குன்றம் மூலக்கரை அருகே பார்வையற்றோர் நான்கு பேர் சாலையை கடக்க முற்பட்டபோது இருசக்கர வாகனம் அவர்கள் மீது மோதியதில் பெண் ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

மேலும் 3 பேர் காயமடைந்த நிலையில் திருப்பரங்குன்றம் 108 வாகனம் மூலமாக திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அடுத்த கட்ட சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்.

களத்தில் இறங்கிய செஞ்சிலுவை சங்கத்தினர்..

விபத்துக்குள்ளானவர்கள் பார்வையற்றவர்கள் என்பதால் உதவிக்கு யாரும் இல்லாத்தால் செஞ்சிலுவை சங்கத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அத்தகவலின் அடிப்படையில் உடனடியாக மதுரை அரசு தலைமை மருத்துவமனைக்கு ராஜ்குமார் தலைமையிலான குழுவினர் அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!