18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழகத்தில் இராமநாதபுரம், நெல்லை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை -பொதுமக்கள் மகிழ்ச்சி..

தமிழகத்தில் இராமநாதபுரம், நெல்லை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை -பொதுமக்கள் மகிழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் April 17, 2019, 2:41 pm

இராமநாதபுரம்,  திருநெல்வேலி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் புயல்காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

திருநெல்வேலியில் கடந்த சில மாதங்களாகவே காேடையை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்தி வந்தது.இதனால் பகலில் வெளியே வருவதற்கு பொதுமக்கள் குறிப்பாக வயதானவர்கள்,சிறுவர்கள், அஞ்சும் நிலை உள்ளது.

இந்நிலையில் பொதுமக்களை மகிழ்விக்கும் விதமாக 17.04.19 இன்று திருநெல்வேலி, பாளையாங்கோட்டை, முருகன்குறிச்சி,கேடிசி நகர் மற்றும் ஆலங்குளம் சுற்று வட்டாரப்பகுதிகளில் சில இடங்களில் புயல் காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

வானில் கருமேகங்கள் தோன்றின. தொடர்ந்து தூறலாக ஆரம்பித்த மழை, சிறிது நேரம் கழித்து கனமழையாக மாறியது. தற்போது அங்கு இடி மின்னலுடன் கனமழை பெய்துவருகிறது. கடும் வெயிலை சந்தித்த மக்கள் தற்போது பெய்து வரும் மழையால் மகிழ்ச்சியில் உள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!