17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கபட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்..

உசிலம்பட்டியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கபட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்..

எழுதியவர்: ஆசிரியர் April 17, 2019, 2:12 am

உசிலம்பட்டி அருகே மாமரத்துப்பட்டியில் சட்ட விரோதமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 180 மதுபாட்டில்கள் பறிமுதல்.தலைமறைவான கோட்டைச்சாமியை (30) போலீசார் தேடி வருகின்றனர்.

பாராளுமன்ற தேர்தலையொட்டி கடந்த 3 தினங்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாமரத்துப்பட்டியில் சட்ட விரோதமாக வீட்டில் மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மாமரத்துப்படடிக்கு விரைந்த போலீசார் அங்கு சட்ட விரோதமாக வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 180 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது மது விற்பனை செய்து வந்த காசிமாயன் மகன் கோட்டைச்சாமியை (30) அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!