17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » டிடிவி தினகரனுக்கு சில இஸ்லாமிய இயக்கங்கள் ஆதரவளிப்பது ஏன்?? பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கம்..

டிடிவி தினகரனுக்கு சில இஸ்லாமிய இயக்கங்கள் ஆதரவளிப்பது ஏன்?? பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கம்..

எழுதியவர்: ஆசிரியர் April 17, 2019, 2:03 am

எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் தலைமையில்,  பல்வேறு இஸ்லாமிய இயக்கத் தலைவர்கள் இன்று (16/04/2019) சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பாக்கர், “இஸ்லாமிய தலைவர்கள் வைத்த 10 கோரிக்கைகளையும் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் தினகரன். ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களும் திமுகவுடன் இருப்பது போன்ற தோற்றத்தை உண்டு பண்ணி  வைத்துள்ளனர். அது இல்லை என்பதை சொல்லவே இந்த சந்திப்பு.

மேலும் வாழ்நாள் முழுவதும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என பகிரங்கமாக சொல்லியவர் தினகரன். ஸ்டாலின் அதுபோல சொல்ல முடியுமா? டி.டி.வியை பாஜக ‘பி’ டீம் என இட்டுக்கட்டி வருகின்றனர், ஆனால் உண்மையிலேயே திமுகதான் பாஜகவின் ‘பி’ டீம். சபரீசன் துபாயில் ஆர்.எஸ்.எஸ். தலைவரை பார்த்து ஆதரவு கொடுப்பதாக சொல்லிவிட்டு வந்திருக்கிறார். ஒரு டி.வி.க்கு பேட்டியளித்த மோடி கூட, ‘வாய்ப்பிருந்தால் திமுகவை சேர்த்துக்கொண்டு ஆட்சியமைப்போம்’ என கூறியிருக்கிறார். ஆனால் இதற்கு திமுகவிடம் இருந்து மறுப்புக்கூட வரவில்லை. உ.பி. முஸ்லிம்கள் அகிலேஷ், மாயாவதிக்கு ஆதரவு கொடுத்தது போல, மேற்கு வங்க முஸ்லிம்கள் மம்தாவுக்கு ஆதரவளிப்பது போல, தமிழக முஸ்லிம்கள் திமுக-காங்கிரஸை நம்பவில்லை, டி.டி.வி.க்குதான் ஆதரவு அளிப்பார்கள்” என குறிப்பிட்டார்.

தேர்தல் நேரத்தில் டிடிவிக்கு பல இஸ்லாமிய இயக்கங்களின் ஆதரவை பல் வேறு இஸ்லாமிய அமைப்புகளே விமர்சித்து வரும் வேளையில்  இந்த விளக்க சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!