18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி அருகே பிளஸ் 1 மாணவன் டிராக்டர் மோதி மரணம்..

காட்பாடி அருகே பிளஸ் 1 மாணவன் டிராக்டர் மோதி மரணம்..

எழுதியவர்: ஆசிரியர் April 16, 2019, 11:45 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தை சேர்ந்த கலைவாணன் . இவரது மகன் பார்த்தி (எ) பார்த்தீபன் இந்த மாணவன் காட்பாடி அடுத்த காந்திநகர் தொன் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் இவ்வாண்டு பிளஸ் 1 முடித்து அடுத்த ஆண்டு பிளஸ் 2 வகுப்பு செல்ல இருந்தான்.

கோடை விடுமுறையில் இருந்த அவன் நேற்று பைக்கில் காட்பாடி நோக்கி செல்லும் போது பிரம்மபுரம் பகுதியில் எதிராக வந்த டிராக்டர் மோதியது. படுகாயம் அடைந்த மாணவனை உடனடியாக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவன் இறந்தான்.

காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!