18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாதிக்க வயது தடையில்லை…. எட்டு வயதில் கலை இளமணி…

சாதிக்க வயது தடையில்லை…. எட்டு வயதில் கலை இளமணி…

எழுதியவர்: ஆசிரியர் April 16, 2019, 1:53 pm

இராமநாதபுரம் சிவன் கோவில் தெருவில் வசித்து வருபவர் எட்டு வயதே நிரம்பிய இசைப்பள்ளியில் பயின்று வரும் மாணவி வி.லேகா ஸ்ரீ, இவர் சிறு வயது முதலே இசையிலும், நாட்டியத்திலும் மிகவும் ஆர்வம் மிகுந்தவராக சிறந்து விளங்குகிறார்.

கடந்த குளிர்கால் சீசனில் இராமநாதபுரம் கலைப்பண்பாட்டுத்துறை மற்றும் ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில் மாநில் அளவிளான குளிர் கால் பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் தன் பரதக் கலை மூலம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இவரின் தனித்திமையை பாராட்டி பாரதி யுவகேந்திரா சார்பில் “யுவஸ்ரீ கலா பாரதி” வழங்கியுள்ளது. அதே போல் பல்வேறு அமைப்புகள் இச்சிறுமியின் திறமையை அங்கீகரிக்கும் வண்ணம் பாராட்டு பத்திரங்களும், சான்றிதழ்களும் வழங்கி வருகின்றனர்.

மேலும் இவரின் திறமையை ஊக்குவிக்கும் வண்ணம் கலைப்பண்பாட்டு துறை சார்பிலும் “கலை இளமணி” என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது.  இவருடைய திறமையை பாராட்டி இராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ் அம்மாணவியை நேரடியாக வாழத்தி பாராட்டினார் என்பது குறிப்பிடதக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!