மதுரை மாநகரில் நடைபெற்றுவரும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் திக்விஜயம், திருக்கல்யாணம், திருத்தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் ஆகிய வைபவங்கள் 16.04.2019 முதல் 19.04.2019 ஆகிய நான்கு நாட்கள் நடைபெற இருப்பதால் 18.04.2019 அன்று மக்களவை பொதுத்தேர்தலும், தேரோட்டமும் நடைபெற இருக்கின்றன எனவே வாக்கு சாவடிக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் தேரோட்டத்தை காணவரும் மதுரை மாநகர், சுற்றுப்புற கிராமப்பகுதி மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து பக்தர்கள், பெருமளவில் வருகைதருவதை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கு ஏதுவாக சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
வியாபார நிறுவன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை நான்கு மாசி வீதிகள், ஆவணி மூலவீதிகளிலும் மற்றும் நேதாஜி சாலையில் நிறுந்தவேண்டாம். தேரோட்ட நிகழ்சிகளை காணவரும் பொதுமக்கள் தங்களின் இருசக்கர வாகனங்களை மஹால் ரோடு, கீழ மாரட் வீதி, வடக்கு வெளிவீதி, மேல மாரட் வீதி, தேற்கு மாரட் வீதி ஆகிய இடங்களில் நிறுத்தவும் நான்கு சக்கரவாகனங்களை வைகை ஆற்றின் தென்கரை, கீழ வெளிவீதி மற்றும் காமராஜர் சாலை ஆகிய இடங்களில் போக்குவத்திற்கு இடையூரின்றி நிறுத்தவும். மேலும் மதுரை மாநகர எல்கைக்குள் லாரி, மினிலாரி, சரக்கு ஆட்டோ ஆகியவை 16.04.2019 அதிகாலை 02.00 மணிமுதல் 19.04.2019 இரவு 10.00 மணிவரை இயக்க அனுமதி இல்லை.
எனவே பொதுமக்களும், வியாபாரிகளும் வாகன உரிமையாளர்களும் மற்றும் ஓட்டுநர்களும் மேற்கண்ட தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.