18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் முக்கிய பகுதிகளில் அச்சமில்லாமல் வாக்களிக்க வலியுறுத்தி காவல்துறையினர் அணிவகுப்பு பேரணி.. வீடியோ..

திண்டுக்கல் முக்கிய பகுதிகளில் அச்சமில்லாமல் வாக்களிக்க வலியுறுத்தி காவல்துறையினர் அணிவகுப்பு பேரணி.. வீடியோ..

எழுதியவர்: ஆசிரியர் April 15, 2019, 10:50 pm

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் இடைத்தேர்தலுடன், நாடாளுமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி காவல்துறையினர் அணிவகுப்பு நடத்தினர்.

திண்டுக்கல்லின் முக்கிய சாலையில் நடந்த அணிவகுப்பில் மாவட்ட ஆட்சியர் வினய் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் தலைமையில் 250 க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்றனர். வாக்களர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் இந்த அணி வகுப்பு நடத்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!