18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் ஓட்டு சேகரிப்பில் ஆர்வம் காட்டும் அரசியல்வாதிகள்.. சுகாதாரத்தையும் கண்டு கொள்வார்களா??

கீழக்கரையில் ஓட்டு சேகரிப்பில் ஆர்வம் காட்டும் அரசியல்வாதிகள்.. சுகாதாரத்தையும் கண்டு கொள்வார்களா??

எழுதியவர்: ஆசிரியர் April 14, 2019, 3:43 pm

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சியினரும் வழிந்து கட்டி கொண்டு ஆயிரம் வாக்குறுதிகளை அள்ளி வீசி கொண்டிருக்கிறார்கள், ஆனால் கண்ணெதிரே நாறி கிடக்கும் குப்பைகளை சரி செய்ய யாருக்கும் மனதில்லை.

கீழே உள்ள படம் கீழக்கரை வடக்குத் தெரு பிரதான சாலையின் நிலையாகும்.  இவ்வழியை கடந்து தான் அனைத்து கட்சியினரும் ஓட்டு கேட்டு செல்கிறார்கள்.  ஆனால் ஒருவருக்கு கூட இந்த சுகாதாரக்கேடு கண்ணில் படவில்லை என்பதுதான் வேதனையான விசயம்.

அதை விட வேதனை இந்த இடத்தில் பல்வேறு வியாபார கடைகள், உணவகங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் எல்லாம் நிறைந்த இடம். ஓட்டு போட போகும் மக்களே ஓட்டு கேட்டு வருபவர்களிடம் எந்த கட்சி, இயக்கம் என்று கேட்காமல், கீழக்கரை சுகாதாரத்திற்கு யார் உத்திரவாதம் தருவார்கள் என கேட்டு ஓட்டு போடுங்கள்.  இது ஒரு அரிய வாய்ப்பு நழுவ விட்டு விடாதீர்கள்.

Thanks to Facebook Post:-

https://www.facebook.com/100021040780623/posts/325171828194174?sfns=mo

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!