17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காதலின் பெயரில் கர்ப்பமாக்கி கை விட்ட காதலன்… சேர்த்து வைக்க காலில் விழுந்து கதறிய பெண்..ஆம்புரில் நெஞ்சை பதற வைத்த சம்பவம்…

காதலின் பெயரில் கர்ப்பமாக்கி கை விட்ட காதலன்… சேர்த்து வைக்க காலில் விழுந்து கதறிய பெண்..ஆம்புரில் நெஞ்சை பதற வைத்த சம்பவம்…

எழுதியவர்: ஆசிரியர் April 13, 2019, 2:37 pm

ஆம்பூர் அருகே இரண்டரை ஆண்டுகாலமாக காதலித்து வந்த இளம் பெண்ணை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த வாலிபர் வீட்டு முன்பு கர்ப்பிணிப் பெண் தர்ணா காவலர்கள் காலில் விழுந்து அழுத காட்சி பார்ப்போர் நெஞ்சை பதற வைத்தது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கோவிந்தாபுரம் சேர்ந்த இளம்பெண் ரேணுகா. இவர் தாய் தந்தை இல்லாத தனது சகோதரி வீட்டில் இருந்து வருகிறார். ரேணுகா அங்குள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் ஜானகிராமனுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இரண்டரை ஆண்டு காலமாக காதலித்து வந்து உள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்திய ஜானகிராமன் ரேணுகாவை தன் வீட்டுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார்.

இதை தொடர்ந்து தான் கர்ப்பமாக உள்ளதாகவும் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பல முறை அவரை தொடர்பு கொண்ட ரேணுகா வற்புறுத்தியுள்ளார். இதை சற்றும் பொருட்படுத்தாமல் உன்னை என் தாய் மற்றும் தங்கை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று ரேணுகாவை ஏற்றுக்கொள்ள மறுத்து உள்ளார். இதை அறிந்த ரேணுகாவின் சகோதரி மற்றும் உறவினர்கள் ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்திற்கு ரேணுகா அழைத்து வந்து 3/3/2019 அன்று புகார் கொடுத்தனர். புகாரை பெற்றுக்கொண்ட மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழரசி விசாரிப்பதாக கூறி பலமுறை இவர்களை திருப்பி அனுப்பி உள்ளார். இரண்டு மாத காலமாக இந்த புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

பின்னர் ரேணுகாவின் உறவினர்கள் காவல் நிலையத்திற்கு சென்று கைது செய்யும்படி வலியுறுத்தியதன் பேரில் இதற்கான வழக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதாகவும் நீங்கள் சென்று நீதி மன்றத்தில் பார்த்துக்கொள்ளுங்கள் என்று ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழரசி கூறியுள்ளார். இதை அறிந்த ரேணுகா மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஜானகிராமன் முன்ஜாமீன் பெற்று விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று தெரிவித்ததால் ஜானகிராமன் வீட்டு முன்பு தனது உறவினர்களுடன் சென்று தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். ரேணுகா அப்போது உமராபாத் உதவி ஆய்வாளர் அருண்குமார் மற்றும் காவல்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். அப்போது இதே வீட்டில் பலமுறை என்னை பலாத்காரம் செய்ததாகவும் அவரை எனக்கு திருமணம் செய்து வைத்து விடுங்கள் என்று காலில் விழுந்து கதறி அழுத காட்சி பார்ப்போர் நெஞ்சை பதற வைத்தது. வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு ஜானகிராமன் இல்லாததால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!