17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவள்ளுவர் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற சித்திரை திருவிழா கவியரங்கம்…

திருவள்ளுவர் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற சித்திரை திருவிழா கவியரங்கம்…

எழுதியவர்: ஆசிரியர் April 13, 2019, 2:26 pm

நெல்லை மாவட்டம் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் நடைபெற்ற சித்திரை விழா கவியரங்கம் கவிஞர் பேரா தலைமையில் 12.04.19 அன்று சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் சுந்தரம் அவர்களின் வாழ்த்துக்களோடு கல்லூரி நிர்வாக அதிகாரி நடராஜன் முன்னிலை உரையும், பேராசிரியர் இந்து பாலா வாழ்த்துரையும் வழங்கினர்.

சமூக ஆர்வலர் சந்திரபாபு தொடக்கவுரைத் தந்தார். “நித்திரை கலைக்கும் சித்திரை”என்ற தலைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதினான்கு மாணவ மாணவிகள் கவியரங்கில் கவிதைகள் வாசித்தனர். அனைவருக்கும் பொதிகைத் தமிழ்ச் சங்கம் மற்றும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் வாசகர் வட்டம் சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியை கல்லூரி நூலகர் முனைவர் பாலச்சந்திரன் மிக நேர்த்தியாக வடிவமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. செ.கீதா வழங்கிய அழகிய தொகுப்புரையோடு இனிதே சித்திரை திருவிழா நிறைவுற்றது.

செய்தியாளர் :- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!