17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொடைக்கானல் பள்ளங்கி பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனம் கவிழ்ந்து விபத்து…

கொடைக்கானல் பள்ளங்கி பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனம் கவிழ்ந்து விபத்து…

எழுதியவர்: ஆசிரியர் April 13, 2019, 1:26 pm

கொடைக்கானல் அருகிலுள்ள பள்ளங்கி- கோம்பை என்ற மலை கிராமத்தை சேர்ந்த லட்சுமி என்பவர் தேனி மாவட்ட கானா விலக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடலை தேனியில் இருந்து கொடைக்கானல் பகுதிக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து வரப்பட்டது.

பள்ளங்கி கோம்பை சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு காலில் காயம் ஏற்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!