17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் அருகே உள்ள பிள்ளையார் நத்தத்தில் பிளாஸ்ட்டிக் குடோனில் தீ விபத்து..

திண்டுக்கல் அருகே உள்ள பிள்ளையார் நத்தத்தில் பிளாஸ்ட்டிக் குடோனில் தீ விபத்து..

எழுதியவர்: ஆசிரியர் April 12, 2019, 7:29 pm

திண்டுக்கல் அருகே உள்ள பிள்ளையார் நத்தத்தில் தோமையார்புரத்தை சேர்ந்த தர்மர் என்பவரது பிளாஸ்டிக் குடோன் இயங்கி வந்தது. இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயனைப்பு துறையினர் தீயை அனைக்க போராடி கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தார்கள்.

.வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் எளிதில் தீ பற்றக்கூடிய பிளாஸ்ட்டிக் பொருட்கள் என்பதாலும் தீயனைப்பு துறையினர் தீயை அனைப்பதற்கு கடுமையான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான. பொருட்கள் எரிந்து சேதம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!