18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காடுகாவல்காரன் வலசையில் ரோட்டின் நடுவே மின்கம்பம் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்..

காடுகாவல்காரன் வலசையில் ரோட்டின் நடுவே மின்கம்பம் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்..

எழுதியவர்: ஆசிரியர் April 12, 2019, 5:30 pm
திருப்புல்லாணி அருகே மேதலோடையில் இருந்து கொட்டியக்காரன் வலசையில் செல்லும் வழியில் கடந்த வாரம் புதியதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது. காடுகாவல்காரன் வலசையில் சாலையோர மின்கம்பத்தின் நடுவே தார்ச்சாலையினை பெயரளவிற்கு அமைத்துச்சென்றுள்ளனர். இடதுபக்கம் வருவோர் ஒதுங்கக்கூட வழியில்லாமல், காத்திருந்து, நிதானித்து செல்லும் நிலை உள்ளது.
இரவு நேரங்களில் இதன் விபரம் தெரியாமல், டூவீலர்களில் வந்த இளைஞர்கள்  மின்கம்பத்தின் பக்கவாட்டில் மோதி விபத்திற்குள்ளாகி, காயமடைந்து செல்வது தொடர்கதையாகவே உள்ளது. கிராம மக்கள் கூறியதாவது; கனரக வாகனங்கள், பஸ் உள்ளிட்டவைகள் வந்தால், கிராம மக்களின் உதவியால் கடந்து செல்கின்றனர். மின்கம்பத்தில் எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டும்,இரவு நேரங்களில் எரியாமல் காட்சிப்பொருளாகவே உ<ள்ளது.இருள் சூழ்ந்து காணப்படும் போது, சைக்கிள் மற்றும் நடந்து செல்வோர்எதிரே வரும் வாகனத்திற்கு வழி தெரியாமல் மோதி வருகின்றனர்.
இதுகுறித்து மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாகவே உள்ளனர்.
I’m protected online with Avast Free Antivirus. Get it here — it’s free forever.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!