18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் தேர்தலினால் அசாதாரண வகையில் போக்குவரத்து நெருக்கடி..

நிலக்கோட்டையில் தேர்தலினால் அசாதாரண வகையில் போக்குவரத்து நெருக்கடி..

எழுதியவர்: ஆசிரியர் April 12, 2019, 12:58 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காலை சுமார் 9மணி முதல் பூ விற்பதற்கும், பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்வதற் காரணமாக   பல்வேறு போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில் சமீபத்தில்  நிலக்கோட்டை அருகே ஒரு கிராமத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. உடனே தீயணைப்பு படையினர்  நிலக்கோட்டை நால் ரோடு வழியாக அந்த கிராமத்தை நோக்கி செல்ல முயன்றனர். ஆனால் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்திற்காக கொடிகளை நட்டுவதற்காக சாலைகளை ஆக்கிரமித்தது இருந்ததால்    தீயணைப்பு வண்டி அந்த இடத்தை கடந்து செல்ல சிரமம் ஏற்பட்டது. இதனால் தீயணைப்பு வண்டியில் வந்த தீயணைப்பு வீரர்களுக்கும், அரசியல் கட்சி தொண்டர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்களுடைய பணி செய்வது தாமதமாகியது. தற்போது தேர்தல் நேரம் என்றாலும் இது போன்ற அவசர தேவைகளுக்கு செல்லும் வாகனங்களுக்கு அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று இந்த பகுதியில் இருந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ராஜா- நிலக்கோட்டை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!