17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேமுதிகவை அசிங்கப்படுத்த நினைத்த துரைமுருகன் இப்போது அசிங்கப் பட்டு நிற்கின்றார் – வேலூரில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..

தேமுதிகவை அசிங்கப்படுத்த நினைத்த துரைமுருகன் இப்போது அசிங்கப் பட்டு நிற்கின்றார் – வேலூரில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..

எழுதியவர்: ஆசிரியர் April 12, 2019, 12:21 pm

வேலூர் பென்ஸ் பார்க்கில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வெற்றி பிரகாசமாக உள்ளது. இரட்டை இலை சின்னம் மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.

தேமுதிகவை அசிங்கப்படுத்த நினைத்த துரைமுருகன் இப்போது அசிங்கப்பட்டு நிற்கின்றார். தகவலின் பேரில் தான் ரெய்டு நடந்தது. தனது மகனை (கதிர் ஆனந்த்) ஜெயிக்க வைக்க கட்டு கட்டாக பணத்தை பதுக்கி வைத்து வாக்காளர்களுக்கு கொடுக்க நினைத்து அவை வருமான வரித்துறைக்கு சென்று விட்டது.

வேலூர் தொகுதி தேர்தல் ரத்தாகுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்ய கூடாது வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக் கூடாது. இன்று துரைமுருகனின் நிலை அலிபாபாவும் 40 திருடர்களும் கதைப் போல் உள்ளது என்று அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!