18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஹோம்சயின்ஸ் கல்லூரியில் “கிராசியன் கண்காட்சி” ..

தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஹோம்சயின்ஸ் கல்லூரியில் “கிராசியன் கண்காட்சி” ..

எழுதியவர்: ஆசிரியர் April 11, 2019, 11:14 pm

தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஹோம்சயின்ஸ் கல்லூரியில் “கிராசியன் கண்காட்சி” நடைபெற்றது.  இந்தக் கண்காட்சியில் அனைத்து துறைகளையும்  சேர்ந்த மாணவிகளின் தனித்துவப்  படைப்புகள் கண்காட்சிப் பொருளாகவும், விற்பனைப் பொருளாகவும்  வைக்கப்பட்டிருந்தன.மேலும்,ஊட்டட்சத்து மிகுந்த உணவுப் பொருட்கள், ஊட்டச்சத்து பானங்கள் ஆகியவையும் வைக்கப்பட்டிருந்தன.  உணவுக்கட்டுப்பாட்டு விழிப்புணர்வும் எடுத்துரைக்கப்பட்டது.  ஆடைவடிவமைப்புத் துறை மாணவிகள் பலவித ஆடைகளை வடிவமைத்து காட்சிப்படுத்தினர்.

வங்கிகளில் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள், நடைமுறைகள் குறித்து மாதிரிகளுடன் விளக்கப்பட்டிருந்தன. ஆங்கிலத்துறை மாணவியர், ஆங்கிலேயர் வாழ்வியல், விளையாட்டு, விமர்சனம், பாடல்கள் ஆகியவை குறித்து காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. கணினி செயல்பாடுகளை விளக்கி, கணினி விளையாட்டுக்களையும் நடத்தினர் கணினித்துறை மாணவியர். இத்துடன் மனிதஉரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன் புத்தக கண்காட்சியும்  நடைபெற்றது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை முதல்வர்.முனைவர் அருட்சகோதரி மேரிகில்டா செய்திருந்தார். இதில், மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!