18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி தொகுதியில் 24-வயதுடைய சுயேட்சை வேட்பாளர் பொன்னுத்தாயின் வேட்பு மனு விவகாரம் – தேர்தல் ஆணையம் கவனக்குறைவா???

தென்காசி தொகுதியில் 24-வயதுடைய சுயேட்சை வேட்பாளர் பொன்னுத்தாயின் வேட்பு மனு விவகாரம் – தேர்தல் ஆணையம் கவனக்குறைவா???

எழுதியவர்: ஆசிரியர் April 11, 2019, 11:02 pm

நெல்லை மாவட்டம் தென்காசி தொகுதியில் குறைந்த வயதுடைய பெண் வேட்பாளரின் மனு ஏற்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அரசியல் கட்சிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி பாராளுமன்ற தொகுதியில் திமுக சுமார் 28 ஆண்டுகள் கழித்து நேரடியாக போட்டியிடுகிறது.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் பொன்னுத்தாய் போட்டியிடுகிறார். இந்த நிலையில் அமமுக பொன்னுத்தாய் இல்லாமல் சுயேச்சைகளாக மேலும் 3 பொன்னுத்தாய்கள் போட்டியிடுகின்றனர். இதனால் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.

வேட்பாளர்களின் இந்த நிலை தற்போது ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறைந்தபட்சம் 25 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்பது விதியாகும்.  ஆனால் தென்காசி நாடாளுமன்றத் தொகுதி சுயேச்சை வேட்பாளர் பொன்னுத்தாய்க்கு 24 வயதுதான் ஆகிறது.

ஆனால் அவரது வேட்புமனு ஏற்கப்பட்டு, சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முரணான தகவல்கள் இருந்தால் அவை வேட்பு மனு சரிபார்த்தலின் போது நிராகரிக்கப்படும். ஆனால் இவரது மனு ஏற்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!