17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாற்றுத் திறனாளிகளின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்..

மாற்றுத் திறனாளிகளின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்..

எழுதியவர்: ஆசிரியர் April 11, 2019, 11:39 am

திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கமும் இணைந்து நடத்திய வாக்களிக்கும் முறை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி 10.04.19 அன்று சிறப்பாக நடைபெற்றது.

பழனி தாலுகாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து வாக்களிக்கும் எந்திரத்துடன் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று மாதிரி வாக்குப்பதிவு எந்திரத்துடன் நேரில் மாதிரி வாக்குபதிவை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் காலை முதல் மாலை வரை 520 பேர் தங்களது வாக்குகளை பதிவேற்றம் செய்து வாக்களிக்கும் முறை பற்றிய விழிப்புணர்வு பெற்றனர்.

சங்கத்தின் மாவட்ட செயலாளர் பகத்சிங், உயரம் தடைபட்டோர் அமைப்பின் மாநில செயலாளர் வெங்கடேஷ் ஆகியோருடன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!