18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் சிறுவர்களை வைத்து பிரச்சாரம் செய்யும் வேட்பாளர்..

நிலக்கோட்டையில் சிறுவர்களை வைத்து பிரச்சாரம் செய்யும் வேட்பாளர்..

எழுதியவர்: ஆசிரியர் April 11, 2019, 11:28 am

திண்டுக்கல் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலும் நிலக்கோட்டையில் இடைத்தேர்தலும் நடைபெறுவதால் இம் மாவட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்நிலையில் நிலக்கோட்டையில் நடைபெறும் இடைத்தேர்தலில் அமமுக – சார்பில் ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யபட்ட R.தங்கத்துரையையே மீண்டும் வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். ஆனால் அவருக்கு தொகுதி மக்கள் மத்தியில் சரியான வரவேற்பு இல்லாத நிலையே உள்ளது.

மேலும் பிரச்சாரத்திற்கு தன்னுடன் யாரும் வராததாலும் தொகுதி மக்களும் தொடர்ந்து புறக்கணிப்பதாலும், பள்ளியில் படிக்கும் சிறுவர்களை அழைத்து பிரச்சார வாகனத்தில் ஏற்றிக் கொண்டு உயிருக்கு ஆபத்தான முறையில் வாகனத்தின் பின் பகுதியில் தொங்க விட்டு கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.  இதனை தேர்தல் கண்காணிப்பாளர்களோ காவல்துறையினரோ கண்டு கொள்வதில்லை.

இதனால் இப்பகுதியின் பொதுமக்கள் மத்தியில் அமுமுக வேட்பாளர் மேலும் எதிர்ப்பினை சம்பாதித்து வருகின்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!