17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இணைய தள செய்தி எதிரொலி… வாகனங்களுக்கு மாசு கட்டுபாடு சான்றிதழ் வழங்க ஏப்ரல் 30ம் தேதி வரை மதுரை வட்டாரத்தில் அவகாசம்…

இணைய தள செய்தி எதிரொலி… வாகனங்களுக்கு மாசு கட்டுபாடு சான்றிதழ் வழங்க ஏப்ரல் 30ம் தேதி வரை மதுரை வட்டாரத்தில் அவகாசம்…

எழுதியவர்: ஆசிரியர் April 10, 2019, 12:45 pm

நேற்று (09/04/219) நமது தளத்தில் வாகனங்களுக்கு  தகுதி சான்றிதழ்  எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தோம். மேலும் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற நவீனமயமாக்கப்பட்ட கருவி மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது என்பதை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தோம்.  அதை தொடர்ந்து நம் நிருபர் காளமேகம் வட்டார அலுவலரிடம் நேரடியாக பிரச்சினைகளை விளக்கினார்.

இதற்கு காரணம் உச்ச நீதிமன்றமும் இந்த ஆணையை உறுதி செய்து ஏப்ரல் 1 முதல் இதை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.  ஆனால் அதற்கு முறையான ஏற்பாடு செய்யாத நிலையில் பணிகள் அனைத்தும் தடைபட்டன.

பின்னர் நமது செய்தி எதிரொலியாக வருகிற ஏப்ரல் 30 வரைக்கும் கால அவகாசம் அளிக்கப்பட்டு அதற்குள் நவீனமயமாக்கப்பட்ட புகை கட்டுப்பாட்டு கருவி சான்றிதழ் கொடுக்க வேண்டும் என மதுரை தெற்கு வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.   இதன் சம்பந்தமாக உடனடி நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிக்கு வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நன்றியை தெரிவித்தனர்.

 செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

https://keelainews.in/2019/04/09/fc-issue/
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!