18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோட்டில் திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் ஆதரித்து நடிகர் சந்திரசேகர் பிரச்சாரம்…

பாலக்கோட்டில் திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் ஆதரித்து நடிகர் சந்திரசேகர் பிரச்சாரம்…

எழுதியவர்: ஆசிரியர் April 9, 2019, 11:04 am

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில்  திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் ஆதரித்து  திமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பேச்சாளருமான நடிகர் சந்திரசேகர் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.  பாப்பாரப்பட்டி பாலக்கோடு மாரண்டஅள்ளி மூன்று பகுதிகளிலும் நேற்று மாலை 7 மணி அளவில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.

பாலக்கோட்டில் நடிகர் சந்திரசேகர் பேசுகையில் பாலக்கோடு சுற்றி விவசாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர் விவசாயத்திற்கு நீர் பாசனம் கிடைக்க என்னை கோல் கால்வாய் திட்டம் அமைக்கப்படும் இதனால் பாலக்கோடு சுற்றியுள்ள அனைத்து விவசாயிகளும்  பயன்பெறுவார்கள் மற்றும் இந்திய திருநாட்டை காப்பாற்ற வேண்டும் தமிழ் மொழி பேசுற தமிழினத்தை பிரிக்க பாக்குற மோடி அரசு இந்திய திருநாட்டை தமிழ் மொழியை காப்பாற்ற வேண்டும் என்றால் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் சந்திரசேகர் பேசினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!