18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மொபைலில் பேசியபடி பேருந்து இயக்கிய ஓட்டுனருக்கு அபராதம்.. நம் இணையதள செய்தி எதிரொலி..

மொபைலில் பேசியபடி பேருந்து இயக்கிய ஓட்டுனருக்கு அபராதம்.. நம் இணையதள செய்தி எதிரொலி..

எழுதியவர்: ஆசிரியர் April 8, 2019, 3:11 pm

கடந்த சனிக்கிழமை (06/04/2019) அன்று நமது செய்தி தளத்தில் திருச்சி மாவட்டம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் தனியார் பேருந்து ஓட்டுநர் செல்போன் பேசியபடி வாகனம் இயக்கியதாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

அச்செய்தியின் அடிப்படையில் இன்று (08/04/2019) அந்த ஓட்டுநருக்கு போக்குவரத்து காவல்துறையினர் சுமார் ஆயிரத்து நூறு (₹.1,100/-)  ரூபாய் அபராதம் விதித்து எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்கள். மீண்டும் இது போன்ற செயலில் ஈடுபட்டால் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளார்கள்.

மேலும் இந்த விழிப்புணர்வு செய்தி மூலம் தீர்வு கண்ட சமூக ஆர்வலர் மற்றும் நிருபர் வி.காளமேகம் அவர்களுக்கு கீழை நியூஸ் நிர்வாகம் இத்தருணத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

 செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்.

https://keelainews.in/2019/04/06/dangerous-driving-2/
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!