17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 5 ஆண்டுகளாக எதுவும் செய்யாத பாஜக, அதிமுக அரசுகள் இப்போது அதை செவோம் , இதை செய்வோம் என மக்களை ஏமாற்றுகிறார்கள்” கனிமொழி பேச்சு..

5 ஆண்டுகளாக எதுவும் செய்யாத பாஜக, அதிமுக அரசுகள் இப்போது அதை செவோம் , இதை செய்வோம் என மக்களை ஏமாற்றுகிறார்கள்” கனிமொழி பேச்சு..

எழுதியவர்: ஆசிரியர் April 8, 2019, 2:22 pm

தூத்துக்குடியில் இன்று காலை வீதிவீதியாக கனிமொழி வாக்கு சேகரித்தார். பெண்கள் குழந்தைகள் மலர் கொத்து கொடுத்து மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி இன்று காலை மடத்தூர் முருகேசன்நகர், பி அண் டி காலணி, 3ம் மைல், ஆசிரியர் காலணி,முத்தாரம்மன் கோவில் பின்ரோடு, நிகிலேசன் நகர், பாரதிநகர், அன்னை தெரசாநகர், ராஜீவ்நகர், உள்ளிட்ட பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்பகுதியில் பெண்கள் ஆரத்தி எடுத்து ரோஜாப்பூ மாலை அணிவித்தும் சால்வை கொடுத்தும் வரவேற்றனர். சில பகுதிகளில் சிறுமிகள் மற்றும் சிறு குழந்தை வெற்றிவேல் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். மடத்தூர் பத்திரகாளியம்மன் கோவில் முன்பு பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர்.

பொதுமக்கள் கொடுத்த மனுக்களை பெற்றுக் கொண்ட பின்பு கனிமொழி பேசுகையில்  “இந்த பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டும் என்று கூறியுள்ளீர்கள் நிச்சயமாக செய்து கொடுப்பேன் கடந்த 5 ஆண்டுகாலமாக மத்தியிலும் மாநிலத்திலும் பிஜேபி அதிமுக ஆட்சி தான் உள்ளன. எதையுமே செய்யாத அவர்கள் இனி நாங்கள் செய்வோம் என்று சொல்லி உங்களை ஏமாற்றுகிறார்கள். இந்த பகுதியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தொழிற்சாலை போராட்டத்தின் போது பாதிக்கபட்ட மக்களுக்கு இன்று வரை ஆறுதல் கூறவரவில்லை. முழுமையாக தொழிற்சாலைக்கு ஆதரவாக செயல்படும் அவர்களை புறம்தள்ளிவிட்டு மறக்காமல் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.

பிரச்சாரத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர் கீதாமுருசேன், தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி, இளைஞர்அணி அமைப்பாளர் ஆனந்தகபரியேல்ராஜ், மாவட்ட பிரதிநிதி இசக்கிராஜா, காங்கிரஸ் தேசியக்குழு உறுப்பினர் சண்முகம் முன்னாள் மாவட்ட தலைவர் அருள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் அகமது இக்பால், மதிமுக நகர செயலாளர் முருகபூபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ஞானசேகரன், நிர்வாகி மகாராஜன், செல்லையா, மற்றும் கூட்டணி கட்சியான மதிமுக பணங்காட்டு படை கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சி கூட்டணி நிர்வாகிகள் தொண்டர்கள் திராளானோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!