17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேர்தலுக்காக தமிழ்நாட்டுக்கு வரும் மோடி கஜா புயலினால் தமிழர்கள் 89 பேர் மாண்ட போது ஏன் வரவில்லை என வைகோ கேள்வி…

தேர்தலுக்காக தமிழ்நாட்டுக்கு வரும் மோடி கஜா புயலினால் தமிழர்கள் 89 பேர் மாண்ட போது ஏன் வரவில்லை என வைகோ கேள்வி…

எழுதியவர்: ஆசிரியர் April 8, 2019, 12:37 am

தேனி பாராளுமன்ற திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

உசிலம்பட்டி தேவர் சிலை அருகே அவர் பேசியதாவது, நான் ஏற்கணவே 2 நடைபயணங்களை மேற்கொண்ட போது உசிலம்பட்டி மக்களை சந்தித்துள்ளேன். நியூட்ரோனோ திட்டத்தை செயல்படுத்தினால் 5 மதுரை தேனி உள்பட 5 மாவட்டங்கள் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வறட்சியால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால்தாள் நாங்கள் நீதிமன்றத்தை அணுகி தடை பெற்றோம்.மோடி பிரதமரானால் மீண்டும் இத்திட்டத்தை செயல்படுத்த வாய்ப்புள்ளது. தேர்தலுக்காக தமிழ்நாட்டுக்கு வரும் மோடி கஜா புயலினால் தமிழர்கள் மாண்ட போது ஏன் வரவில்லை. விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது சாத்தியமில்லை எனக்கூறும் மோடி கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகளின் பல்லாயிரம் கோடி கடன்களை தள்ளுபடி செய்கிறார். ஆனால் விவசாயத்திற்கென தனி பட்ஜெட் போடப்படும் என்கிறார். சிந்தித்து திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் எனக் கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!