18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வித்தியாசமான வடிவமைப்பில் மதநல்லிணக்க தேங்காய்கள்..

வித்தியாசமான வடிவமைப்பில் மதநல்லிணக்க தேங்காய்கள்..

எழுதியவர்: ஆசிரியர் April 7, 2019, 2:16 pm
ரெகுநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன. தேங்காய்களை உரிப்பதற்கு முன்பு உள்ள தென்னை நெத்துக்களில் வித்தியாசமான வடிவமைப்புடன் அரியதான நெத்துக்கள் கிடைக்கும். இவற்றினை சேகரித்து வைத்து, கோயில், தர்கா, சர்ச்சுகளில் நேர்த்திக்கடனாக வழங்க விருப்பமுள்ள பொதுமக்களுக்கு இலவசமாக தந்து உதவுகிறார்.
ரெகுநாதபுரம் தென்னை விவசாயி முருகன் கூறியதாவது;
தென்னந்தோப்பு வைத்துக்கொண்டு, தேங்காய் மொத்த வியாபாரமும் செய்து வருகிறேன். லட்சத்தில் அரிதாக வித்தியாசமான வடிவமைப்புடன் தென்னை நெத்துக்கள் கிடைக்கும். அவற்றில் பிள்ளையார் வடிவம், யானையின் தும்பிக்கை வடிவம், காண்டாமிருக உருவம், கொம்பு உருவம் உள்ளிட்ட பல வடிவங்களில் கிடைக்கும். கோயில்களிலும், தர்காக்களிலும், சர்ச்சுகளிலும் வேண்டுதல் வைத்துள்ள பொதுமக்கள் வித்தியாசமான வடிவமுள்ள  தென்னை நெத்துக்களை தேர்வு செய்து நேர்த்திக்கடனாக செலுத்துவது இப்பகுதியில் வழக்கமாக நிகழ்ந்து வருகிறது. 3 ஆண்டுகள் வரை இவ்வகை நெத்துக்கள் கெடாமல் இருக்கும். சந்தனம், குங்கும் இட்டு பூஜைக்காக, என்னிடம் முன்பே சொல்லி வைத்து இலவசமாக பெற்றுச்செல்கின்றனர்.
மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, வழிபாட்டு முறையிலும் தென்னை நெத்துக்கள் இடம் பிடிப்பது மனதிற்கு நிறைவையும், மகிழ்ச்சியையும் தருகிறது என்றார்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!