18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே பால்வண்டியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் பலி…

உசிலம்பட்டி அருகே பால்வண்டியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் பலி…

எழுதியவர்: ஆசிரியர் April 7, 2019, 2:08 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்யானிபட்டியைச் சேர்ந்த ஆண்டிச்சாமி மகன் அருன் (23). இவர் அதே பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் பால்வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது வலையபட்டி அருகே எதிரே வந்த பால்வண்டி மீது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவஇடத்திலேயே அருன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த உசிலம்பட்டி தாலுகா போலீசார் சம்பவஇடத்திற்கு நேரில் சென்று அருனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மரத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!