17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காங்கிரஸ் கூட்டத்தில் காலி இருக்கைகள் – படம் பிடித்த விகடன் செய்தியாளர் மீது தாக்குதல்!.. WJUT மற்றும் பல்வேறு சங்கங்கள் கண்டனம்..

காங்கிரஸ் கூட்டத்தில் காலி இருக்கைகள் – படம் பிடித்த விகடன் செய்தியாளர் மீது தாக்குதல்!.. WJUT மற்றும் பல்வேறு சங்கங்கள் கண்டனம்..

எழுதியவர்: ஆசிரியர் April 7, 2019, 12:21 pm

காங்கிரஸ் கூட்டத்தில் காலி இருக்கைகள் – படம் பிடித்த விகடன் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தி விருதுநகரில் காங்கிரஸ் தொண்டர்கள் அடாவடி!

விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்தாகூரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்ட பிரசாரப் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், கூட்டம் சேராததால் இருக்கைகள் காலியாக இருந்ததைப் படம் எடுத்த ஜூனியர் விகடன் புகைப்படக் கலைஞர் முத்துராஜை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உள்ளிட்ட சிலர் சராமாரியாகத் தாக்கினார்கள். அதனால் காயமடைந்த புகைப்படக் கலைஞர் முத்துராஜ், விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது சம்பந்தமாக WORKING JOURNALIST UNION OF TAMIL NADU  தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ் மற்றும் பொதுச்செயலாளர் ஆர்.சந்திரிகா மற்றும் இன்ன பிற சங்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!