கீழக்கரை அருகே முள்ளுவாடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகத்துடன் இணைந்து பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பொதுமக்கள் கல்விச்சீர் வழங்கினர். நிகழ்ச்சிக்கு பள்ளித்தலைமையாசிரியர் ஆர்.உஷா தலைமை வகித்தார்.
பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் பாண்டி மீனா,பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெராக்ஸ், பிரிண்டர் மிஷின், சேர்கள், பூந்தோட்ட பராமரிப்பு உபகரணங்கள், பர்னிச்சர்கள், சமையல் பாத்திரங்கள், பிஸ்கட், தின்பண்டங்கள்உள்ளிட்டவைகளை தலையில் சுமந்தவாறு வந்த பொதுமக்கள் பத்திரகாளியம்மன், சந்தியடி அம்மன், முருகன் கோயில்களில் மூன்று முறை வலம் வந்து, ஊர்வலமாக பள்ளிக்குச்சென்றுசென்று பொருட்களை வரிசையாக வைத்தனர். பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆரத்தி எடுக்கப்பட்டது. உதவி ஆசிரியர் ஆர்.சுதரீஷன் நன்றி கூறினார்.
பொதுமக்கள் கூறுகையில், திருப்புல்லாணி வட்டாரத்தில் முதல்முறையாக கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளோம். வரும் ஆண்டுகளில் கூடுதலாக எங்களின் பங்களிப்புகளை வழங்கிட உள்ளோம். இதன்மூலம் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒரு இணைப்பு பாலமாக இந்த கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி அமைந்துள்ளது என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.







You must be logged in to post a comment.