17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வடகரை,மேக்கரை பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம்..

வடகரை,மேக்கரை பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம்..

எழுதியவர்: ஆசிரியர் April 7, 2019, 1:22 am

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து தென்னை, மாமரங்களை சேதப்படுத்தியதோடு சோலார் வேலிகளை நாசம் செய்ததால் அப்பகுதி விவசாயிகள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

செங்கோட்டை அருகே உள்ள மேக்கரை என்னும் கிராமத்தில் திடீரென இரண்டு யானைகள் தங்கள் குட்டிகளுடன் புகுந்தது. இதே பகுதியில் உள்ள ஒரு மாந்தோப்பில் உள்ள மரங்களை இழுத்துப்போட்டு நாசம் செய்தது.

மேலும் அங்குள்ள தென்னை மரங்களையும் சாய்த்தது.இதனை தொடர்ந்து வடகரை ஜாகீர்உசேன் என்பவருக்கு சொந்தமான தோப்புக்குள் புகுந்த யானைகள் அங்கு அமைக்கப்பட்டிருந்த சோலார் மின்வேலிகளை மிதித்து நாசம் செய்தது. இப்படி தொடர்ந்து யானைகள் வந்து அட்டகாசம் செய்வதால் இந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள் மட்டுமன்றி பொது மக்களும் கடும் பீதி அடைந்துள்ளார்கள்.

கோடை காலங்களில் யானைகள் கூட்டம் கூட்டமாக ஊருக்குள் புகுந்து விளை நிலங்களில் அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களுக்கு செல்லவே அச்சம் அடைந்துள்ளனர். எனவே வனத்துறை அதிகாரிகள் விளை நிலங்களுக்குள் யானைகள் புகாதவாறு தேவையான உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!