17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் கொளுத்தும் வெயில்- வெளியில் செல்ல அச்சத்தில் பொதுமக்கள்…

நெல்லையில் கொளுத்தும் வெயில்- வெளியில் செல்ல அச்சத்தில் பொதுமக்கள்…

எழுதியவர்: ஆசிரியர் April 6, 2019, 5:19 pm

திருநெல்வேலியில் இப்போது இருந்தே கோடை காலத்தை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று மட்டும் 101.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

பகலில் வெயில் கொளுத்துவதால் குறிப்பாக மதியம் வெளியே வர பொதுமக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவான நிலையில், நேற்று 101.2 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடுமையான வெயில் காரணமாக பிற்பகலில் மாநகரில் உள்ள பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இருப்பினும் கரும்புச்சாறு, பழச்சாறு, தர்ப்பூசணி போன்ற வெயில் கால பழங்கள் விற்பனை களை கட்டத் துவங்கியுள்ளது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!