17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தோரையன்வலசையில் மூன்று குடிசை வீடுகள் தீயில் எரிந்து சேதம்..

தோரையன்வலசையில் மூன்று குடிசை வீடுகள் தீயில் எரிந்து சேதம்..

எழுதியவர்: ஆசிரியர் April 6, 2019, 5:06 pm
திருப்புல்லாணி அருகே தோரையன்வலசை கிராமத்தில் பிற்பகல் 3:15 மணியளவில் சமையல் செய்த நெருப்பு பரவி தீ விபத்து ஏற்பட்டது. குடிசைவீட்டில் வசித்து வந்த கூலித்தொழிலாளி காக்கையன் 65, என்பவரது வீட்டில் நேற்று பகலில் விறகு அடுப்பில் சமையல் செய்துள்ளனர். அவற்றில் இருந்து பறந்த நெருப்பு தீப்பற்றியதில் அருகே உள்ள மூதாட்டி ராஜம்மாள் 67, கூலித்தொழிலாளி ராமு 32 ஆகியோரது குடிசைவீடுகளில் தொடர்ந்து தீப்பற்றி எரிந்தது.
ராமு வீட்டில் இருந்த ரூ.25 ஆயிரம், ராஜம்மாளிடம் இருந்த ரூ.32 ஆயிரம் ரொக்கப்பணம், ரேசன், ஆதார்கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் பாத்திரங்கள் தீயில் எரிந்து சேதமானது. ஒன்று திரண்ட கிராம மக்கள் டிராக்டர் மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். .
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!