திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (05/04/2019) ஸ்ரீரங்கம் சென்ற தனியார் பேருந்து வாகன எண் TN49BZ0334(MJP) ஓட்டுனர் கடுமையான நெரிசல் பகுதியில் செல்போனில் பேசிக்கொண்டே பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். இதை கவனித்த சமூக ஆர்வலர் ஓருவர் வீடியோ எடுத்ததை கூட பொருட்படுத்தவில்லை.
மேலும் போக்குவரத்து நெரிசல் நேரத்தில் மிகவும் அஜாக்கிரதையாக செல் போனை பயன்படுத்தி வாகனத்தை இயக்கியது பயணிகளிடையே மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து காவல் துறையும் சம்பந்தப்பட்ட தனியார் பேருந்து நிர்வாகமும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
செய்தி வி காளமேகம்







You must be logged in to post a comment.