18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » எப்பொழுது தீரும் இந்த தண்ணீர் பஞ்சம் என கண்ணீர் வடிக்கும் கிராம மக்கள்…

எப்பொழுது தீரும் இந்த தண்ணீர் பஞ்சம் என கண்ணீர் வடிக்கும் கிராம மக்கள்…

எழுதியவர்: ஆசிரியர் April 5, 2019, 3:43 pm

நெல்லை மாவட்டம் கண்ணநல்லூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வில்வனம்புதூர் காலணியில் பொதுமக்கள் தண்ணீர் இன்றி மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியில் பல மாதங்களாகவே தண்ணீர் இல்லாத அவல நிலை காணப்படுகிறது.

இதற்கு காரணம் மின் மோட்டார் பழுதடைந்து இருப்பதே என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இது குறித்து இப்பகுதி கிராம மக்கள் பஞ்சாயத்திடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது பற்றி பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கேட்டால் இப்பொழுது எல்லா செயல்பாடும் வள்ளியூர் யூனியன் அலுவலகத்தில் தான் பொறுப்பு உள்ளது என்று கூறியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்திட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!