18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை அரசு மருத்துவமனையில் அழையா விருந்தாளியாக உலா வரும் தெரு நாய்கள்…

மதுரை அரசு மருத்துவமனையில் அழையா விருந்தாளியாக உலா வரும் தெரு நாய்கள்…

எழுதியவர்: ஆசிரியர் April 5, 2019, 3:33 pm

தென்மாவட்டங்களின் மிக முக்கிய அரசு மருத்துவமனைகளில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையும் ஒன்று என்பதை யாவரும் அறிந்ததே. இங்கு மதுரை மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர

பல நோயாளிகள் தங்களுக்கு உாிய முறையிலும்,நல்ல முறையிலும் சிகிச்சை கிடைக்கும் என நம்பி இம்மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இங்கு நடமாடும் நாய்களால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மட்டுமில்லாமல் அவர்களை சந்திக்க வரும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இது மாதிரியான செயல்களுக்கு மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகம் எந்த ஒரு முயற்சியும் எடுப்கதாக தெரியவில்லை என புலம்புகின்றனர் சமூக ஆர்வலர்கள். மேலும் நோய்க்கு வைத்தியம் பார்க்க வரும் இடத்தில் நாய் கடித்து கூடுதலாக சிகிச்சை பெற வேண்டிய நிலையாக உள்ளது,  யாரிடம் முறையிடுவது என தெரியாமல் புலம்பி தவிக்கின்றனர் நோயாளிகளும், பொதுமக்களும்.

.நடவடிக்கை எடுக்குமா மருத்துவமனை நிர்வாகமும்..?மாவட்ட நிர்வாகமும்?…மாநகராட்சி நிர்வாகமும்..???

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!