17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 13 நபர்கள் கைது..

மதுரையில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 13 நபர்கள் கைது..

எழுதியவர்: ஆசிரியர் April 3, 2019, 10:03 pm

இன்று (03.04.19)மதுரை மாநகர் E1 – புதூர் ச&ஒ சார்பு ஆய்வாளர் திரு.முருகேசன K.புதூர், சர்வேயர் காலனி பகுதியில் ரோந்து பணியில் இருந்த போது பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக அவருக்கு கிடைத்த இரகசிய தகவலை பெற்று சர்வேயர் காலனி 120அடி ரோட்டின் அருகில் சென்று பார்த்த போது அங்கு (1) ஜான்நிக்கல்சன் 47/19 (2) பொன்ராஜ் 40/19, (3) குணசேகரன் 57/19, (4) செந்தில்குமார் 38/19, (5) ராஜ்குமார் 40/19, (6) கிருஷ்ணமூர்த்தி (7) கணேஷ்பூபதி 36/19, (8)திருசெந்தில்குமார் 44/19, (9) குணசேகரன் 41/19, (10) ஆண்ரூஸ் பிரபு 40/19, (11) அசோக்குமார் 46/19, (12) மதியழகன் 38/19, (13) சேதுராமன் 33/19, ஆகிய நபர்கள் சேர்ந்து பணம் வைத்து மங்காத்தா என்னும் உள்ளே, வெளியே என்ற சீட்டு விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் 13 நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 52 சீட்டு கட்டுகள், மற்றும் பணம் ரூபாய் 7,300/- ஆகியவை கைப்பற்றப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!