18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல்… அமமுக வேட்பாளருக்கு பல இடங்களில் நுழைய விடாமல் எதிர்ப்பு..

நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல்… அமமுக வேட்பாளருக்கு பல இடங்களில் நுழைய விடாமல் எதிர்ப்பு..

எழுதியவர்: ஆசிரியர் April 3, 2019, 9:55 pm

நிலக்கோட்டை அருகே நூத்துலாபுரம் கிராமத்தில் வாக்கு சேகரிக்க வந்த அமமுக வேட்பாளர் தங்கதுரையிடம் கடந்த முறை ஜெயித்து சென்று எதுவும் செய்யவில்லை என கூறி ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து திருப்பி அனுப்பினர்.

அதேபோல் தெற்கு விராலிபட்டி என்ற கிராமத்தில் வாக்கு சேகரிக்க சென்ற தங்கத்துரையை ஊருக்குள் நுழைய விடாமல் சாலையில் முட்களை வெட்டி போட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.  அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க ஏன் முன் வரவில்லை என கேள்வி கேட்டு கடும் வாக்குவாதத்தில் அவ்வூர் மக்கள் ஈடுபட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!