17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் காவலர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு பயிற்சி…

மதுரையில் காவலர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு பயிற்சி…

எழுதியவர்: ஆசிரியர் April 1, 2019, 8:42 pm

இன்று (01/04/2019) காலை மதுரை மாநகர் ஆயுதப்படை மைதானத்தில் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., வரும் சித்திரை திருவிழா மற்றும் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியின் போது கூட்டங்களை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்து சிறப்பு பயிற்சி வழங்கினார்.

மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுத்தப்படும் காவலர்களுக்கு பொதுமக்களை அன்பான முறையில் அணுக வேண்டும்,  அதிகார துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்றும் நண்பர்களாக பழக வேண்டும் என்றும் அவர்களிடம் எப்பொழுதும் ஆறுதலாக பேசவேண்டும் என்றும், குற்றவாளிகளை எவ்வாறு அடையாளம் காண்பது, அவர்கள் எவ்வாறு கண்காணிக்கப்பட வேண்டும், மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக விளக்கம் கொடுத்தார்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!