17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்..

ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்..

எழுதியவர்: ஆசிரியர் March 31, 2019, 5:55 pm

திண்டுக்கல் வடக்கு ரத வீதி சாக்குகடைசந்து வெங்காய குடோன்களுக்கு நடுவே ஒரு குடோனுக்குள் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கிவைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.

அத்தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையில் நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மணிமாறன் ஆய்வாளர் உலகநாதன் சார்பு ஆய்வாளர்கள் பாஸ்டின் தினகரன், சுந்தரேஸ்வரன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெளிமாநிலத்தில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

அதை தொடர்ந்து ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள 2 டன் புகையிலை பொருட்கள், ரூபாய் 60,000 மற்றும் இரு சக்கர வாகனம் ஒன்று ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து குட்கா மற்றும் புகையிலை பொருட்களை சரக்கு வேன் மற்றும் மினி லாரியில் ஏற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக உசேன் என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!