18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் திமுக பாராளுமன்ற வேட்பாளர் கதிர் ஆனந்த் பொறியியல் கல்லூரியில் வருமான வரித்துறையினர் தொடர் சோதனை…

வேலூர் திமுக பாராளுமன்ற வேட்பாளர் கதிர் ஆனந்த் பொறியியல் கல்லூரியில் வருமான வரித்துறையினர் தொடர் சோதனை…

எழுதியவர்: ஆசிரியர் March 30, 2019, 6:28 pm

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் காட்பாடியை சேர்ந்த திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றார். இவருக்கு தமிழ்நாடு – ஆந்திர எல்லையான காட்பாடி கிறிஸ்தியான் பேட்டையில் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி உள்ளது.

நேற்று (29/03/2019) நள்ளிரவு முதல் வருமான வரித்துறை தேர்தல் பறக்கும் படையினர் கூட்டாக இவரது காட்பாடி காந்தி நகர் வீட்டில் சோதனை நடத்தினர். தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்ததின் பேரில் இந்த சோதனை நடந்தது.

சோதனையின் போது சில ஆவணங்களும் ரூ 10 லட்சம் ரொக்கமும் கைப்பற்றபட்டது. மேலும் தொடர்ந்து காலை முதல் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் வருமான வரித்துறை மற்றும் பறக்கும் படையினர் மாலைவரை தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். சில ஆவணங்கள் கைப்பற்றி உள்ளதாக தெரிகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் காட்பாடியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட துரைமுருகன் ஓட்டு ஒன்றுக்கு ரூ 500 கொடுத்து வெற்றி பெற்றதாக காட்பாடி தொகுதி மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!