திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் அ.இ.அ.தி.மு.க.-தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடக்கவிருக்கும் பரபரப்பான அரசியல் சூழலில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ஆம் தேதி துவங்கி சென்ற 26-ஆம் தேதியோடு நிறைவடைந்தது. 27-ஆம் தேதி இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.
மேலும் மனுவை திரும்ப பெற திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க., தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, நாம் இந்தியன் கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 39 பேர் 49 வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்ட போது 22 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து 27 பேர் தேர்தல் களத்தில் இருந்தனர். அமமுக வேட்பாளர் மைக்கேல் ராயப்பனின், மாற்று வேட்பாளரான அவருடைய மகன் செரோன் ராஜா சேவியர் தனது வேட்பு மனுவை நேற்று (29.03.19) வாபஸ் வாங்கினார்.
இறுதியாக திருநெல்வேலி தொகுதியில் மொத்தம் அனைத்து கட்சிகளை சேர்ந்த 26 வேட்பாளர்கள் தற்போது களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் திருநெல்வேலியை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் ஓரிரு கட்சிகளை தவிர தேர்தல் கட்சிகளின் பிரச்சாரங்கள் இன்னும் களை கட்ட ஆரம்பிக்கப்படவில்லை.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.