17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை பாரதிநகர் பள்ளி ஆண்டு விழா..

கீழக்கரை பாரதிநகர் பள்ளி ஆண்டு விழா..

எழுதியவர்: ஆசிரியர் March 30, 2019, 3:38 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே பாரதி நகர் நடுநிலைப்பள்ளியில் கிராம் மக்கள் பங்களிப்புடன் 19வது ஆண்டு விழா நடந்தது. திருப்புல்லாணி வட்டார கல்வி அலுவலர் ஜெ.தங்கக் கனிமொழி தலைமை வகித்தார். திருப்புல்லாணி வட்டார வள மைய மேற்பார்வையாளர் அன்வர் ஜகான் முன்னிலை வகித்தார்.

தலைமையாசிரியர் ஜெ.ராணி வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுநர் சந்தனக்குமார், கிராமத் தலைவர் செல்லம், துணைத்தலைவர் சங்கர், மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் மாசானம் ஆகியோர் பேசினர். ஆசிரியர்கள் ஆனந்தக்குமார், ஜேசு அருளானந்தம், பவுலின் லத்தீசியா, கோகிலா ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர். விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.  ஆசிரியர் முருகேசன் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!