17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » “தங்கத்தமிழ்ச் செல்வன் தண்ணீரில் போட்ட கோலம் போல காற்றடித்தால் கரைந்து விடுவார். நான் தான் உள்ளுர்காரன்”.. உசிலம்பட்டியில் அதிமுகவினர் ஓட்டு சேகரிப்பு ..

“தங்கத்தமிழ்ச் செல்வன் தண்ணீரில் போட்ட கோலம் போல காற்றடித்தால் கரைந்து விடுவார். நான் தான் உள்ளுர்காரன்”.. உசிலம்பட்டியில் அதிமுகவினர் ஓட்டு சேகரிப்பு ..

எழுதியவர்: ஆசிரியர் March 30, 2019, 1:57 pm

தங்கத்தமிழ்ச் செல்வன் தண்ணீரில் போட்ட கோலம் போல காற்றடித்தால் கரைந்து விடுவார். நான் தான் உள்ளுர்காரன். உங்கள் வீட்டுப்பிள்ளை எனக்கூறி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் வாக்குச் சேகரித்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி செல்லம்பட்டி ஒன்றியப்பகுதிகளில் தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும் துணைமுதல்வர் பன்னீர்செல்வம் மகனுமான ரவீந்திரநாத் வாக்குச் சேகரித்தார்.உசிலம்பட்டி அருகே தி.விலக்கு செம்பட்டி ஆகிய கிராமங்களில் வாக்கு சேகரிக்கும் போது கிராமமக்களிடம் அவர் பேசியதாவது ஒருவர் வெளியூர்காரர். அவர் தொகுதிப்பக்கமே வர மாட்டார். மற்றொருவர் தண்ணீரில் போட்ட கோலம் போல.காற்றடித்தால் கோலம் கரைந்து போவது போல் காணாமல் போய்விடுவார். நான்தான் உள்ளுர்காரன்.உங்கள் வீட்டுப்பிள்ளை. நீங்கள் எப்பொழுது கூப்பிட்டாலும் ஓடி வருவேன் எனக்கூறினார். உடன் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரும் வாக்கு சேகரித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!