17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் நள்ளிரவு வருமான வரித்துறையினர் சோதனை திமுகவினர் அதிர்ச்சி..

காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் நள்ளிரவு வருமான வரித்துறையினர் சோதனை திமுகவினர் அதிர்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் March 30, 2019, 12:56 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் திமுக பொருளாளரும் காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகனின் வீடு உள்ளது. துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த வேலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடுகிறார். இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து நேற்று (29/03/2019) நள்ளிரவு சதீஷ், முரளிதரன் மனோஜ் ஆகியோர் அடங்கிய வருமான வரி துறையினர் அந்த வீட்டிற்கு வந்தனர். அப்போது அங்கு வந்த துரைமுருகன் தனது வக்கீல்களுக்கு உடனடியாக போன் செய்தார்.

விரைந்து வந்த வக்கீல்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். பிறகு அங்கு வந்த வருமான வரித்துறை விஜய்தீபன் சோதனை செய்ய உத்தரவிட்டார். விடியற்காலை வரை நடந்தது. முழு விவரம் கிடைக்கவில்லை. கட்சியினர் வீட்டின் முன்பு குவிந்து உள்ளனர். போலீசாரும் குவிக்கப்பட்டு இருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கே.எம்.வாரியார், வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!