18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாநகராட்சி கவனக்குறைவால் வீணாகும் குடிநீர்..

மதுரை மாநகராட்சி கவனக்குறைவால் வீணாகும் குடிநீர்..

எழுதியவர்: ஆசிரியர் March 30, 2019, 12:31 pm

மாநகராட்சி அதிகாரி மெத்தனப் போக்கு அரைகுறை வேலைகள் வீணாகும் குடிநீர் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 ஆவது வார்டு மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் உடைந்த குடிநீர் குழாயை சரி செய்தார்கள். ஆனால்  அதை அரைகுறையாய் செய்ததால் மீண்டும் குடிநீர் வீணாகி சாலையில் வீணாக ஓடுகிறது.

இதனால் சாலையும் பழுதாகி, குடிநீரும் வீணாகிறது. மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோடைகாலம் என்பதால் குடிநீர் வீணாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!